#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
30000 அடியிலிருந்து குத்திட்டு சரிந்த விமானம்.! மரண பீதியில் அலறிதுடித்த பயணிகள்! வைரலாகும் புகைப்படங்கள்!!
அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருந்து ஃபோர்ட் லாடர்டேல் பகுதிக்கு டெல்டா விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றுள்ளது. அப்பொழுது விமானம் நன்றாக நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென 30000 அடியிலிருந்து 10000 அடிக்கு சரிந்து விழத் துவங்கியுள்ளது.
மேலும் சிறிதும் எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அனைவரும் மொத்தமாக சாகப்போகிறோம் என மரண பயத்தில் அலறி கத்தியுள்ளனர்.
மேலும் அப்பொழுது ஆக்சிசன் மாஸ்களும் வெளிவந்ததால் விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அச்சம் இன்னும் அதிகரித்துள்ளது. இருப்பினும் விமான ஊழியர்கள் தொடர்ந்து யாரும் பயப்பட வேண்டாம், பீதியடைய வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கத்திக் கொண்டே இருந்துள்ளனர் .
அதனைத் தொடர்ந்து சுதாரித்த விமானி, தக்க நேரத்தில் விமானத்தை அவசரஅவசரமாக தம்பா சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கி உள்ளார். 7 நிமிடங்கள் பயணிகள் அனைவரையும் மரணத்தின் உச்சிக்கே கொண்டுசென்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.