தமிழகத்தின் திட்டம் கனடாவிலும்.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பு.!



Foods to school kids In canada

கனடா நாட்டின் சமீபத்திய பட்ஜெட்டில் தேசிய பள்ளி உணவுத் திட்டத்திற்கு நிதியளிக்க 5 ஆண்டுகளில் 1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 16ஆம் தேதி இந்த நிதியானது வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை, பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் துணை பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரி கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

Food

சமீபத்தில் வெளியான பட்ஜெட்டுக்கு முன்பான நீண்ட ஆய்வுக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நலனை மேம்படுத்துவதை மிக முக்கியமானதாக கருதுகிறது. குழந்தைகளுக்கு அவர்களது வாழ்க்கையில் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க விரும்புகின்றோம். பசியில் வாடும் பள்ளி குழந்தைகளுக்கு உணவு திட்டங்கள் ஏற்கனவே பல நாடுகளில் அமலில் உள்ளது. ஆனால், அவை சுமார் 21 சதவீதம் பேரை மட்டுமே சென்றடைவதாள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

Food

இது பற்றி, NDP தலைவர் ஜக்மீத் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, "குழந்தைகள் பசியுடன் இருக்கும் போது மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது மிக கடினம். அன்றாட உணவுக்கு போராடும் பல குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களின் குழந்தைகளும் பட்டினி கிடக்கின்றனர். அந்த குழந்தைகள் பசியோடு இருக்கும் போது பள்ளி பாடங்களில் அவர்கள் எப்படி கவனம் செலுத்துவார்கள்? விளையாட்டிலும் குழந்தை பருவத்திலும் அவர்களால் வேடிக்கையாக செயல்பட முடியுமா.? பசியை பற்றி யோசிக்கும் போது அவர்களால் குழந்தையைப் போல யோசிக்கவோ விளையாடவோ முடியாது. அவர்களது குழந்தை பருவத்தை அவர்கள் இழக்கின்றனர். அது நடக்கக்கூடாது."என்று பேசியுள்ளார்.