இந்தியாவா? கனடாவா?... அமெரிக்காவின் நிலைப்பாடு இதுதான்.. முன்னாள் பென்டகன் அதிகாரி பகீர் தகவல்.. அதிர்ச்சியில் கனடா.!



Former Pentagan Higher Official Says about America Stand With India If face on Canada Vs India 

 

கடந்த 1980-களில் பஞ்சாப் மாநிலத்தை சீக்கியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கூறி, காலிஸ்தானிய இயக்கம் போராட்டத்தை முன்னெடுத்தது. இவர்கள் பின்னாளில் ஆயுதமேந்திய போராட்டத்தை கையில் எடுத்ததால், மத்திய அரசால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர். 

80 களில் தொடங்கிய காலிஸ்தான் இயக்கத்தை இந்தியா அடையாளம் கண்டு அடுத்தடுத்து நசுக்கினாலும், இங்கு பல்வேறு குற்றச்செயல்களை செய்துவிட்டு கனடா, இலண்டன் போன்ற நாடுகளில் அடைக்கலம் புகுந்த காலிஸ்தானிய ஆதரவாளர்கள், அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். 

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கனடா மக்களாக வருணித்து அந்நாட்டின் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 

அவரது கொலைக்கு பின்னணியில் இந்திய அரசு இருப்பதாகவும் தெரிவித்தவர், கனடாவில் இருந்த இந்திய ரா அமைப்பின் மூத்த அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேற்றினார். இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா, அந்நிய மண்ணில் இந்தியா எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை என அறிவித்தது. 

அதேபோல, இந்தியாவில் இருக்கும் கனடா உயர் அதிகாரியும் 5 நாட்களுக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டது. கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டன. கனடா - இந்தியா உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. 

இந்த பதற்றம் தணிவதற்குள் அடுத்த காலிஸ்தானிய பயங்கரவாதி இரண்டு கும்பல் இடையே நடந்த சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் காலிஸ்தானிய ஆதரவாளர்கள் கனடாவில் இந்தியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் அச்சம் ஏற்பட்டது. 

அவர்களை பாதுகாக்க கனடா அரசிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் கனடா முறையீடும் செய்துள்ளது. 

தனது கருத்துக்கு பலம் சேர்க்க அமெரிக்கா தங்களுடன் இருக்க வேண்டும் என கனடா அழைப்பு விடுத்திருந்தது. இவ்விவகாரத்தில் இந்தியா - கனடா அரசுகள் தார்மீக விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நடுநிலை பக்கம் நிற்கும் அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிராக பேச தயக்கம் காண்பித்துள்ளது. இது கனடாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. 

இந்த விஷயம் குறித்து அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் பெண்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறுகையில், "கனடாவுடைய குற்றசாட்டு இந்தியாவை விடவும் கனடாவுக்கே அதிக அபாயத்தினை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவா? கனடாவா? என நிலை வந்தால், அமெரிக்கா இந்தியாவின் பக்கம் நிற்கும்.

இந்தியாவுடன் கொண்ட உறவு அமெரிக்காவுக்கு முக்கியமானது. கனடா இந்தியாவுடன் இவ்வாறான சர்ச்சை செயலில் ஈடுபடுவது எறும்பு யானையுடன் மோதுவதற்கு சமமானதாகும். தான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை ட்ரூடோ வழங்கவில்லை. 

இந்தியாவினால் தீவிரவாதி என அடையாளம் கொடுக்கப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு கனடா விளக்கம் அளிக்க வேண்டும். பிளம்பராக வேலைபார்த்து வந்த நிஜ்ஜார் சுத்தமான மனிதர் இல்லை. அவரின் கரங்கள் இரத்தக்கறை கொண்டவை என்பதை நினைவில் வைக்க வேண்டும்" என தெரிவித்தார்.