மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! வாக்கிங் போன பெண்ணுக்கு இப்படியொரு நிலைமையா? யாரையும் நம்பாதீங்க.!
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் பூங்கா ஒன்றில் இளம்பெண் ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு மற்றொரு பெண் அழைத்து வந்த நாய் ஒன்று அவரை கடிக்க முயற்சித்துள்ளது.
இதனால் பயந்துபோன அந்த பெண் நாயிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, நாய் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாயின் உரிமையாளரான மற்றொரு பெண், மறுநாள் ஜாக்கிங் வந்தபோது பெப்பர் ஸ்பிரே அடித்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் கோபத்தில் அவரை நாயை போல கடிக்கவும் செய்துள்ளார்.
வலியில் கதறிய அப்பெண், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.மேலும் அந்த நாயையும், அதன் உரிமையாளரான பெண்ணையும் எடுத்த வீடியோவையும் அவர் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு அந்த பெண்ணைப் பற்றி தகவல் கொடுக்கும்படி பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.