மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சரக்கு இரயில் - பயணிகள் இரயில் மோதி பயங்கர விபத்து.. 26 பேர் பலி., 85 பேர் படுகாயம்..!
இரண்டு இரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டில் உள்ள மத்திய பகுதியின் Larissa நகரில் சரக்கு இரயில் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அந்த வழித்தடத்தில் Athens நகரில் இருந்து Thessaloniki நகரை நோக்கி பயணிகள் இரயில் பயணித்துக்கொண்டு இருந்தது.
இந்த இரண்டு இரயில்களும் Larissa நகரில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் உயிர்சேதம் அதிகமாகியுள்ளது.
At least 26 dead and 86 injured in head-on train collision in Greece. pic.twitter.com/vFuXn0BXqA
— Scott McClellan (@ChaseTheWX) March 1, 2023
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.15 க்கு மேல் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விபத்தில் சிக்கிய பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 26 பேர் பலியாகியுள்ளனர். 85 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த 85 பேரில் 25 பேரின் நிலைமை மோசமான நிலையில் உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.