மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கின்னஸ் ரெக்கார்டு..69,255 பென்சல்களை சேகரித்து சாதனை படைத்த இளைஞர்..!
பொதுவாக கின்னஸ் சாதனை என்பது செய்ய இயலாத அல்லது முடியாது ஒன்றை செய்து காட்டி உரிய சான்றிதழை பெறுவது கின்னஸ் சாதனையாகும். மேலும் மனிதனாலும் இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் ஒரு புத்தகமாகவும் கின்னஸ் புத்தகம் விளங்குகிறது.
அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் வசித்து வருபவர் ஆரோன் பார்த்தலோமி. இவர் அமெரிக்க பென்சில் சேகரிப்பாளர்கள் சங்கத்தின் உதவியுடன் 69 ஆயிரத்து 255 பென்சில்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மேலும் அவர் 100 ஆண்டுகளுக்கும் பழமையான நினைவு பென்சில்கள், விளம்பரப் பென்சில்கள் மற்றும் ரோட்டரி போன்கள் டயல் செய்ய வடிவமைக்கப்பட்ட பென்சில்கள் மற்றும் விளையாட்டு பென்சில்கள் போன்றவைகளை சேகரித்து இந்த சாதனையை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.