திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குளியலறையில் இருந்த சிவப்பு நிற பெட்டி! சந்தேகத்தில் திறந்து பார்த்த கல்லூரி மாணவிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
அமெரிக்காவில் பிரபல பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கல்லூரி மாணவ மாணவியர்கள் சிலர் ஒன்றாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த வீட்டின் பாத்ரூமில் ஒரு சிவப்புநிற பெட்டி இருந்துள்ளது. அதனைக் கண்ட மாணவிகள் குளிப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் ஏதேனும் வைக்கப்படும் பெட்டியாக இருக்கலாம் என எண்ணியுள்ளனர்.
ஆனால் அந்தப் பெட்டியில் சிறிய துளை ஒன்று இருப்பதை கண்ட ஆயூப்ரே என்ற மாணவிக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மற்றொரு மாணவியிடம் கூறிய நிலையில், அவருக்கும் அச்சம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் அந்த பெட்டியை உடைத்து, திறந்து பார்த்தபோது உள்ளே செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை வீட்டில் தங்கியிருக்கும் மாணவன் ஒருவன் வைத்துள்ளார்.
இந்நிலையில் தாங்கள் குளிப்பதை வீடியோ எடுப்பதற்காக அந்த செல்போனை பெட்டிக்குள் மறைத்து வைத்து இருக்கிறார் என்பதை உணர்ந்த அந்த மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த மாணவனிடம் கேட்ட போது, அவர் முதலில் பாடல் கேட்பதற்காகதான் செல்போனை அங்கு வைத்ததாக கூறியுள்ளார். பின்னர் தொடர்ந்து கேட்டபிறகு அனைத்தையும் உளறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அந்த இரு மாணவிகளும் இதுகுறித்து ஆதாரங்களுடன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் செல்போனை ஆராய்ந்த அவர்கள், பாத்ரூமில் செல்போனை வைத்து அனைத்தையும் வீடியோ எடுத்ததை உறுதி செய்து மாணவனை கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.