மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காணாமல் போனவரின் உடல் பாகம் சுறாவின் வயிற்றுக்குள் எப்படி வந்தது... அதிர்ச்சி சம்பவம்...!!
அர்ஜென்டினாவை சேர்ந்தவர் டியாகோ பேரியா(32). இவருக்கு விர்ஜினியா பிரிக்கர் என்ற மனைவி உள்ளார். இந் நிலையில், கடந்த18-ஆம் தேதி டியாகோ காணாமல் போனதாக விர்ஜினியா போலீசில் புகார் அளித்தார்.
டியாகோவை காணவில்லை என்பதால் அனைவரும் பல இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர், அவரது பைக்கையும் ஹெல்மெட்டையும் கடற்கரை ஓரத்தில் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.
டியாகோ காணாமல் போய் எட்டு நாட்களுக்கு பிறகு அவரைப் பற்றிய அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைத்தது. மீன் பிடிக்கும் மீனவர் ஒருவர் ஒரு சுறா மீனை பிடித்துள்ளார்.
வழக்கம்போல் அவர் பிடித்த மீனை சுத்தம் செய்யும் போது, மீன் வயிற்றுக்குள், மனித கழிவு இருந்ததை பார்த்துள்ளார். அதோடு மீனின் வயிற்றில் சில உடல் பாகங்களும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து அந்த மீனவர் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தார். உடனே அவரிடம் வந்து விசாரணை மேற்கொண்டு அதிகாரிகள் விர்ஜினியாவுக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்து உடல் பாகங்களை பார்த்தவர், அதில் அவரது கணவர் டியாகோவின் டாட்டூ இருந்ததை பார்த்தார். இதனால் சுறாவின் வயிற்றுக்குள் இருந்த மனித கழிவு டியாகோ உடையது என்று உறுதியானது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போனவரின் உடல் பாகம் சுறாவின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.