53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பகீர் சம்பவம்.... 45 பிளாஸ்டிக் பைகள் நிறைய மனித உறுப்புகள்... காவல்துறை தகவல்.?
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அண்டை நாடான மெக்சி கோவில் 45 பிளாஸ்டிக் பைகளில் மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ நாட்டில் உள்ள ஜலிஸ்கோ மாகாணத்தில் அமைந்துள்ள
குவாடலஜாராவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பெரிய பள்ளத்தாக்கில் தான் இந்த உடல் உறுப்புக்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இதில் ஆண் பெண் என இருப்பாளரின் உடல் உறுப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கண்டெடுக்கப்பட்டுள்ள உடல் உறுப்புகள் மிகவும் அழகிய நிலையில் இருப்பதால் எப்போது இறந்தார்கள் என்ற விவரத்தை உடனடியாக கூற முடியவில்லை என காவல்துறை தெரிவித்து இருக்கிறது.
கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் தடையவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. மே மாதம் 20ஆம் தேதி 5 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பான தேடுதல் வேட்டையின் போது தான் இந்தப் பைகளில் இருந்த உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் ஒரே கால் சென்டரில் பணிபுரிபவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தக் கால் சென்டர் ஏதேனும் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மாகாணத்தில் உடல் உறுப்புகள் இதுபோன்று கண்டடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டில் 11 பேரில் உடல் உறுப்புகள் 70 பைகளிலும் 2019 ஆம் ஆண்டு 29 பேரின் உடல் உறுப்புகள் 119 பைகளிலும் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றிய செய்தி வெளியாகி நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.