மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 மாத கர்ப்பிணி பெண்ணை கொன்று.. கணவன்,மனைவி செய்த கொடூர காரியம்.! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!!
மெக்சிகோ நாட்டில் 20 வயது நிறைந்த இளம் கர்ப்பிணி பெண் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த குழந்தை திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் கர்ப்பிணி பெண் சடலமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் வெராகுரூஸ் நகரில் வசித்து வந்த ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற 20 வயது நிறைந்த கர்ப்பிணி பெண் என தெரியவந்தது. மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தது.
அதாவது 8 மாத கர்ப்பிணியான ரோசா ஐசலாவை கொன்சாலோ மற்றும் வெரோனிகா என்ற தம்பதியினர் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பிறக்க போகும் குழந்தைக்கு தேவையான ஆடைகளை தாங்கள் தருவதாக கூறி அவரை அழைத்துள்ளனர். இதனை நம்பி ரோசா விமான நிலையம் அருகே அவர்கள் கூறிய பகுதிக்கு அவர்களை சந்திக்க சென்றுள்ளார். பின் அவர்களுடன் ரோசா காரில் ஏறி சென்றுள்ளார். இவையனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அதன் பின்னர் அவரை யாரும் பார்க்க முடியவில்லை. மேலும் குழந்தை பெற்று கொள்ள முடியாத கொன்சாலோ- வெரோனிகா தம்பதியினரிடம் குழந்தை ஒன்று இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்பு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ரோசாவை கடத்தி, அவரது வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்ததும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியினரை கைது செய்து அவர்களிடம் இருந்த பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.