திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆஸ்திரேலியாவின் குப்பைத்தொட்டியில் இந்தியப் பெண்ணின் சடலம்.! கணவர், மகனுடன் இந்தியாவுக்குப் பறந்தார்.!
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவில் இருக்கும் விக்டோரியாவில் உள்ள பக்லியில் அமைந்துள்ள தொலைதூர சாலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சடலம் அங்கிருந்த ஒரு தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட சடலம் ஹைதராபாத்தில் உள்ள ஏஎஸ் ராவ்நகரைச் சேர்ந்த சைதன்யா மதகனி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனது கணவர் அசோக் ராஜ் மற்றும் மூன்று வயது மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்துள்ளார். அவர் இறந்து கிடந்த இடத்திற்கும் அவர் குடியிருப்பு உள்ள பாயிண்ட் குக் என்ற இடத்திற்கும், சாத்தியமான இணைப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
சைதன்யாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதற்கு சற்று முன்பு, அவரது கணவரும், மகனும் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது கணவரின் மேல் சந்தேகம் வலுவடைந்துள்ளது. சைதன்யா அவரது வீட்டில் கொல்லப்பட்டு, பின்பு அவரது உடல் குப்பை தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
பாயிண்ட் பகுதியில் உள்ள அவரது அண்டை வீட்டார்கள், சைதன்யாவை அன்பும், கருணையும் நிறைந்த ஒரு நல்ல நபர் என்று நினைவு கூறுகிறார்கள். அவர் அடிக்கடி சமைத்து உணவை பகிர்ந்தளிக்கும் பண்புடையவர் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த கொலை சம்பவம் விசாரணை நடந்துவரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.