ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அதுமட்டும் நடந்தால் அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள்! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியும் நடந்து வந்தது.
குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்சும் போட்டியிடுகின்றார். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தேசிய கொள்கைக்கான கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜோ பிடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனா நம் நாட்டை சொந்தமாக்கும். அவர்கள் நம் நாட்டை சொந்தமாக்குவார்கள், எனவே நாங்கள் அதை நடக்க விடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.