மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு வாரத்தில் 400 பப் சிகிரெட் பிடித்ததால் சோகம்; 17 வயது சிறுமிக்கு நேர்ந்த பெருங்கொடுமை.!
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுமி, தனது 15 வயதில் இருந்து இ-சிகிரெட் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார். தொடர்ந்து, இவர் சிகிரெட் பிடித்து வாரத்தில் 400 க்கும் மேற்பட்ட பப்களை இழுத்துள்ளார். இதனால் நுரையீரலில் இரத்த கொப்புளம் ஏற்பட்டு இருக்கிறது.
உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்
இறுதியாக கடந்த மே 11 அன்று தனது தோழரின் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த பெண்மணியின் உடல் நீல நிறமாக மாறியதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் இளம்பெண்ணுக்கு உடனடி சிகிச்சை அளித்து, 5 மணிநேர அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றி இருக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது - கனடா பகிரங்க குற்றசாட்டு.. கேள்விக்குறியாகும் இந்தியா - கனடா உறவுகள்.!
கூடா சவகாசம் கேடில் முடிந்தது
கிட்டத்தட்ட அச்சிறுமி மாரடைப்பு அபாயம் வரை சென்று தற்போது உயிர்பிழைத்து இருக்கிறார். தனது 15 வயதில் இருந்து நண்பர்களுடன் சேர்ந்து புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட பெண்மணி, வாரத்திற்கு 4000 பப்களை சுவாசித்து இருக்கிறார். இதனால் அவர் தனது 17 வயதில் மிகப்பெரிய விபரீதத்தை எதிர்கொண்டு இருந்துள்ளார்.
இதையும் படிங்க: என்னா வெயிலு.. வெப்ப அலையில் இருந்து மக்களை பாதுகாக்க ஜப்பானில் என்ன செய்றாங்க தெரியுமா? அசத்தல் வீடியோ உள்ளே.!