11 வயது முதல் கடத்தி சீரழிக்கப்படும் சிறுமிகள்.. பாலியல் அடிமைகளாக பெண்கள்.. சூடானில் பகீர்.!



  in Sudan Fighters Using the Girls Like Sex Salves 

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில், ஆட்சியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் குழு தனித்தனியே போராடி வருகிறது. ஆயுதமேந்தி நடக்கும் இந்த போரின் காரணமாக, அங்குள்ள மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. 

உள்நாட்டில் நிலவும் பஞ்சம், வறட்சி காரணமாக கடுமையான சவால்களை அம்மக்கள் எதிர்கொள்கின்றனர். இதனிடையே, சூடானில் இருக்கும் மக்களில், இளம் வயதுள்ள பெண்கள், சிறுமிகள் போராளி குழுக்களால் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்படும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. 

கடத்தி சென்று கற்பழிப்பு

ஒவ்வொரு வீடாக, ஆயுதமேந்தி நுழையும் போராளி குழுக்கள், அங்குள்ள 11 வயது முதல் 18 வயது வரை இருக்கும் சிறுமிகளை குறிவைத்து கடத்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவ்வாறாக கடத்தி செல்லப்படும் சிறுமிகள், ஒவ்வொரு தினமும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். 

இதையும் படிங்க: விமானத்துக்குள் கசமுசா.. பயணியின் அந்தரங்க வீடியோ லீக்.. விமான பயணத்தில் எல்லைமீறல்..!

சிறுமிகளை சங்கிலியில் கட்டி வைத்து தப்பிக்க வழியில்லாமல் தங்களின் தலைமை இடத்திற்கு தூக்கிச் சென்று சீரழிக்கும் கும்பல், அவர்களுக்கு உணவாக சோள மாவு மற்றும் நீர் மட்டுமே கொடுத்து இருக்கிறது. இவ்வாறான எண்ணம் கொண்ட கும்பலின் காரணமாக, பல சிறுமிகள் கருத்தரித்தும் இருக்கின்றனர்.

அரங்கேறும் துயரம்

ஒருசில நேரம் கூட்டாக சேர்ந்து நடக்கும் பாலியல் அத்துமீறலில் சிலர் அதிக இரத்தப்போக்கு தொடர்பான துயரத்தையும் எதிர்கொண்டு இருக்கின்றனர். அங்கிருந்து தப்பிக்க வழியின்றியும் தவித்துள்ளனர். ஒருசில சிறுமிகள், அங்கு போராளிகள் குழுவில் இருக்கும் சில நல்ல நபர்களின் உதவியுடன் தப்பித்து வருகின்றனர். 

சர்வதேச அளவில் கவலைக்கிடமான, பதற்றம் நிறைந்த, பாதுகாப்பே இல்லாத நாடுகளின் பட்டியலில் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த சூடான், தற்போது இதுதொடர்பான தகவலையும் அம்பலப்படுத்தி அதிர்ச்சி தந்துள்ளது.

இதையும் படிங்க: #Breaking: நாட்டை விட்டு வெளியேறினார் சிரிய அதிபர் பஷர்.. அதிபர் மாளிகை சூறையாடல்.!