குலையே நடுங்குதே... கொத்துக் கொத்தாக எரித்து பொசுக்கப்பட்ட 41 குழந்தைகள்... கண்ணீருடன் பிணவறைக்கு படையெடுக்கும் பெற்றோர்.!
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பாடசாலைக்குள் புகுந்த ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினரும் ராணுவமும் தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காங்கோ எல்லையில் அமைந்துள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த ஐஎஸ் ஆதரவு ஏடிஎஃப் தீவிரவாத குழு இந்த கொடூர தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தில் 37 மாணவர்கள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூட்டப்பட்டிருந்த மாணவர் விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் அதனை தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் மாணவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. முதல் கட்ட விசாரணையில் 20 மாணவிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 17 மாணவர்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சடலங்களை அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ள பிணவரைக்கு பெற்றோர்கள் கண்ணீருடன் படையெடுத்து வரும் காட்சி மனதை வாட்டி வதைப்பதாக இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான சடலங்கள் எரிந்து இருப்பதால் அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2019 நடத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.