திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா.... இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த துருக்கி தூதர்...!
காஷ்மீர் விவகாரத்திலும், சிஏஏ விவகாரத்திலும் இந்தியாவின் நிலைப்பாட்டை துருக்கி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.
கடந்த 36 மணி நேரமாக துருக்கியில் ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை ஆட்டங்கான வைத்துள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மிக மோசமான பாதிப்பை இந்த பத்து நகரங்கள் சந்தித்துள்ளன.
துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், 5-வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது.
இந்தநிலையில், துருக்கி நாட்டிற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கும், துருக்கிக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. காஷ்மீர் விவகாரத்திலும், சிஏஏ விவகாரத்திலும் இந்தியாவின் நிலைப்பாட்டை துருக்கி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.
ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தற்போது துருக்கிக்கு இக்கட்டான நேரத்தில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா முன் வந்துள்ளது. நிவாரண பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை துருக்கிக்கு இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் 100 மீட்பு படை வீரர்கள் துருக்கி சென்றுள்ளனர். இது போன்ற மீட்பு பணிகளில் உடல்களை, மனிதர்களை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட பயிற்சி பெற்ற நாய்களும் இந்த மீட்பு பணிக்கு களமிறங்கியுள்ளது. மேலும் பல்வேறு மீட்பு உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தநிலையில், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேவையான உதவிகளை செய்ததற்காக, இந்தியாவுக்கு, துருக்கி நன்றி தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நேற்று, புதுடில்லியில் இருக்கும் துருக்கி துாதரகத்துக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேவையான உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அப்போது, துருக்கியின் துாதர் பிராட் சனல் சார்பில், இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.