வாகன ஓட்டிகளுக்கு ஷாக் செய்தி.. வரலாற்றில் இல்லாத அளவு உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை..!



India Petrol Diesel Price May Hike Due to Russia Ukraine War Issue

கடந்த 110 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருக்கிறது. 5 மாநில தேர்தல்கள் நிறைவடைந்ததும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்றாற்போல் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போதைய நிலையில், உலகளவில் உக்ரைன் - ரஷியா பிரச்சனையில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளன.

சர்வதேச சந்தையில் பீப்பாய் கச்சா எண்ணெய் 100 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ள நிலையில், நேற்று 99.38 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2014 ஆம் வருடம் பிரெக்சிட் பிரச்சனையால் கச்சா எண்ணெய் விலை 99 டாலராக அதிகரித்து இருந்த நிலையில், அதன் பின்னர் தற்போது 2022 இல் அதே தொகை விலையை எட்டியுள்ளது. 

கடந்த வருடம் அக். மாதம் 26 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை 82.74 டாலராக இருந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.110.04 எனவும், டீசல் ரூ.98.42 எனவும் விற்பனை செய்யப்பட்டது. கொரோனா முதல் அலையில் 82 நாட்கள் மாற்றம் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது 110 நாட்கள் ஆகியும் மாற்றமில்லாமல் இருக்கிறது.

India

கச்சா எண்ணெய் உற்பத்தியை பொறுத்தவரையில் ரஷியாவில் உலகளவில் 10 % எனவும், இயற்கை எரிவாயு உற்பத்தி ஐரோப்பாவில் 3 இல் 1 பங்கு எனவும் உள்ளது. இயற்கை எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைனின் வழியே குழாய் மூலமாக அனுப்பப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் வருடத்தில் தினமும் 43 ஆயிரத்து 400 பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆனது. 

இது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 % ஆகும். இதனைப்போல, நிலக்கரி 1.8 மில்லியன் டன்னும், எல்.என்.ஜி எனப்படும் இயற்கை திரவ எரிவாயு 2.5 மில்லியன் டன்னும் ரஷியாவில் இருந்து இறக்குமதி ஆனது. ரஷியாவின் தற்போதைய பரபரப்பு செயலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அச்சம் உள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.