திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆஸ்திரேலியாவில் பகீர் சம்பவம்.... காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்திய மாணவி.! உயிருடன் புதைத்த திடுக்கிடும் சம்பவம்.!
இந்தியாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இந்தியர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறது ஆஸ்திரேலிய காவல்துறை.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் வசித்து வந்தவர் ஜாஸ்மின் கவுர்(21) நர்சிங் மாணவியான இவர் தரிக்ஜோத் சிங் என்ற இந்திய இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த மாணவியை பிளிண்டர்ஸ் ரேஞ்ச் மலைப் பகுதிக்கு கடத்திச் சென்ற தரிக்ஜோத் சிங் அவரது கை மற்றும் கால்களை கேபிளால் கட்டி கழுத்தை அறுத்து உயிருடன் மண்ணுக்குள் புதைத்து இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் மாணவி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் அவரது காதலர் தரிக்ஜோத் சிங் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு எதிரான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் நிச்சயமாக ஆயுள் தண்டனை கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர் "தரிக்ஜோத் சிங் ஜாஸ்மினை கொலை செய்தது மிகவும் அசாதாரனமானது. முதலில் அவர் ஜாஸ்மின் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனால் அவரது உடலை புதைத்ததாகவும் தெரிவித்த
தரிக்ஜோத் சிங் தற்போது உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் கொலை செய்வதற்கு முன்பாக சூப்பர் மார்க்கெட்டில் இருந்து அவர் கையுறை மற்றும் மண்வெட்டி போன்ற பொருட்கள் வாங்கும் சிசிடிவி காட்சிகள் இந்த வழக்கில் முக்கிய தடையுமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.