மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: கால்பந்து போட்டி மைதானத்திற்குள் கலவரம்: பெண்கள், குழந்தைகள் உட்பட 129 பேர் பலி.!
கால்பந்து ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 129 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு ஜாவா நகரில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியை காணுவதற்கு அதிகளவிலான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக வெற்றிபெற்ற அணியின் ரசிகர்கள் - தோல்வியடைந்த அணியின் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை கலைக்க காவல் துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
ஆனால், கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி என மொத்தமாக 129 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 காவல் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளார்கள். பெண்கள், குழந்தைகள் என பலரும் கலவரத்தில் சிக்கி உயிரிழந்தனர்.