ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரை திருமணம் செய்து 4 நாட்களில் விவாகரத்து செய்த நபர்.!! என்ன காரணம் தெரியுமா?
இந்தோனேசியாவை சேர்ந்த நபர் ஒருவர் எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரை திருமணம் செய்து, பின்னர் நான்கு நாட்களில் விவாகரத்து செய்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தோனேசியா நாட்டை சேர்ந்த Khoirul Anam என்ற இளைஞர் தன்னை மணமகன் போல் அலங்காரம் செய்துகொண்டு, எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் ஒன்றுக்கு மணமகள் போல் அலங்காரம் செய்து, இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
தன்னுடைய ரைஸ் குக்கர் வெள்ளையானதாகவும், அன்பானதாகவும் , நன்றாக சமைப்பதாகவும், நான் சொல்வதை கேட்டு நடக்கும் விதமாக இருப்பதாலும், அதனை திருமணம் செய்துகொண்டதாக Khoirul Anam அந்த பதிவில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் பதிவை வெளியிட்டுள்ள அவர், அரிசி சாதத்தை மட்டுமே அந்த ரைஸ் குக்கர் சமைப்பதால் அதனை விவாகரத்து செய்வதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். குக்கரை திருமணம் செய்ததும், பின்னர் நான்கு நாட்களில் அதை விவாகரத்து செய்த நபரின் செயல் இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.