மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காருக்குள் முத்தம்... இளம் காதல் ஜோடிக்கு கொடுத்த வினோத தண்டனை தந்த இந்தோனேசியா அரசு.!
இந்தோனேசியாவில் காருக்குள் வைத்து முத்தமிட்ட காதல் ஜோடிகளுக்கு 21 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஏற்ப குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனேக நாடுகளில் போதை பொருள் கடத்தல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை ஆகியவற்றிற்கு மரண தண்டனை இருக்கிறது.
மேலும் சில நாடுகளில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளுதல், எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது .
இதேபோன்று இந்தோனேசியாவில் திருமணமாகாத காதல் ஜோடி காரில் வைத்து முத்தம் கொடுத்ததால் அவர்களுக்கு தண்டனையாக 21 கசையடி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தண்டனை பொதுவெளியில் வைத்து அவர்களுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.