மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆப்கானிஸ்தானை கைப்பற்ற துடிக்கும் ஐ.எஸ்.. தாலிபனுக்கே ஆப்பு.. ஐ.நா பகீர் எச்சரிக்கை.!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அதனை எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிக்கையின் மூலமாக, வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத குழுக்கள் அதிகளவிலான சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், 20 வருட உள்நாட்டு போருக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தாலிபனும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள், மத்திய - தெற்காசிய நாடுகளிலும் அதன் அமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. ஐ.எஸ் வளர்ச்சி தலிபான்களின் முதல் அச்சுறுத்தல் என்றும் கூறப்பட்டுள்ளது.