பெரு நாட்டு சிறுமிக்காக களத்தில் இறங்கிய இத்தாலி மக்கள்... கடத்தப்பட்டாரா.? நடந்தது என்ன.?
பெரு நாட்டைச் சார்ந்த ஐந்து வயது சிறுமி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் உள்ள ஹோட்டலில் இருந்து காணாமல் போன சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது.
பெரு நாட்டைச் சார்ந்த ஐந்து வயது சிறுமியான கட்டாலியா மியா சிசிலோ தனது பெற்றோருடன் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் உள்ள ஆஸ்டர் என்ற ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் இவர்களுடன் 1040 புலம்பெயர் மக்களும் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதியிலிருந்து சிறுமியை மட்டும் காணவில்லை. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் தொடர்பாக இத்தாலி காவல்துறையினர் ஹாஸ்டல் ஹோட்டலை தங்களது முழு கட்டுப்பாட்டில் எடுத்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியை தேடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. சிறுமி கடத்தப்பட்டிருந்தால் அவரை சூட்கேஸில் வைத்து தான் கடத்திருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முதல் ஹோட்டலில் இருந்த அனைவரையும் வெளியேற்றிய காவல் துறையினர் சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் முழு ஹோட்டலையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது இத்தாலி காவல்துறை . இத்தாலிய மக்களும் சிறுமியை தேடும் பணியில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்த சிறுமிக்கு ஆறு வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் பெரும் நாட்டில் இருந்து இத்தாலியில் குடி பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.