மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்பச்செய்தி: திருமணம் செய்தால் ரூ.1.67 இலட்சம் ரொக்கம் பரிசு.. ஜோடிகளே தயாராகுங்கள்.!
கொரோனாவால் பல உலக நாடுகள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது. இத்தாலி சுற்றுலா தலங்களுக்கு பிரபலமான நாடாக இருந்து வந்த நிலையில், அங்கும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுலாத்துறையின் மூலமாக அந்நாட்டுக்கு கிடைத்த வருமானம் மெல்லமெல்ல சரியத் தொடங்கியது.
குறிப்பாக, இத்தாலி நாட்டில் உள்ள லாசியோ (Lazio) நகரம் சுற்றுலாவுக்கு மிகப்பிரபலமான இத்தாலிய பகுதிகளில் ஒன்றாகும். அங்குள்ள நினைவு சின்னங்கள், ரோமானிய கட்டிடக்கலைகள், நீரூற்று மற்றும் பிரபலமான இயற்கை திருமண தளங்கள் பிரசித்தி பெற்றவை ஆகும். இங்குதான் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
வைரஸ் பரவலின் காரணமாக கலையிழந்து போன சுற்றுலாவை மீண்டும் புதுப்பிக்க எண்ணியுள்ள லசியோ மாகாணம், அங்கு திருமணம் செய்ய வரும் தம்பதிக்கு 2 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,67,000) பணத்தை பரிசாக கொடுப்பதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக 10 மில்லியன் டாலர் (ரூ.83 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தாலிய மற்றும் வெளிநாட்டு தம்பதிகளும் இத்திட்டத்தின் கீழ் திருமண செலவுக்கான பணத்தை பெறலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பணம் பெற விரும்பும் ஜோடிகள் ஜனவரி 1, 2022 இல் தொடங்கி டிசம்பர் 31, 2022 க்குள் லாசியோ மாகாணத்தில் வைத்து திருமணம் செய்திருக்க வேண்டும்.
இந்த வருடத்தில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மட்டும் இந்த திட்டம் மூலமாக பணம் வழங்கப்படும் என்றும், நிதிஉதவி பெற விரும்பும் தம்பதிகள் ஜனவரி 31, 2023-க்குள் தகுந்த சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் உள்ளூரில் சுற்றுலா மூலமாக வருமானம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.