திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பென்ஷன் பணத்திற்காக சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்க்கை.. அரசுக்கு ஒன்றரை கோடி பட்டை நாமம்.!
தனது தாயாரின் ஓய்வூதிய பணத்தை 6 ஆண்டுகள் முறைகேடாக பெற்ற மகன், தாயின் அழுகிய சடலத்துடன் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இத்தாலி நாட்டில் உள்ள வானெட்டொ பகுதியில் வசித்து வரும் பெண்மணி ஹெல்கா மரியா. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். அப்போது அவரின் வயது 86.
இவருக்கு மாதம்தோறும் பென்ஷன் பணம் கிடைத்துவந்த நிலையில், அவரின் மகன் பென்ஷன் பணத்தை இழந்துவிடக்கூடாது என தாயாரின் உடலை வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்து வந்துள்ளார்.
இவ்வாறாக 6 ஆண்டுகள் அரசின் பணத்தை வாங்கிய நபரின் மீது அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வீட்டிற்கு வந்த அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் உண்மை அம்பலமானது. தாயாரின் பென்ஷன் பணமான ஒன்றரை கோடி ரூபாயை மகன் பயன்படுத்தி இருக்கிறார்.