தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
குழந்தை பெற்றுக் கொள்ள அரசே பணம் தருகிறதா... எங்கு, எவ்வளவு தெரியுமா.? ஷாக் நியூஸ்...
ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க செய்யும் விதமாக அந்நாட்டு அரசு அதிரடியான புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு கூடுதலாக 48,000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது.
குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு தொகையாக 2 லட்சத்து 52 ஆயிரம் வழங்கி வந்த நிலையில் தற்போது அதனுடன் 48,000 ரூபாய் உயர்த்தி புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதாவது பொருளாதார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மை ஆகிய காரணங்களால் மக்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே கூடுதலாக 48,000 சேர்த்து மொத்தம் 3 லட்சம் வழங்க ஜப்பான் அரசு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.