தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ்.! கொண்டாடும் மன்னார்குடி மக்கள்.!



kamala harish as a US vice president

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்னும் சிறப்பையும் பெற்றுள்ளார். இவரது வெற்றியை பல தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். 

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இந்தநிலையில், துளசேந்திரபுரம் கிராம மக்கள், துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற்றது தங்களது கிராமத்திற்கு பெருமையளிப்பதாக வீட்டு வாசலில் கோலமிட்டு, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கமலா ஹாரிஸின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

kamala harish

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அங்குள்ள 538 தேர்தல் வாக்குகளில், அதிபட்சமாக 270 வாக்குகளைப் பெற வேண்டும். இந்த தேர்தலில் டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். இந்தநிலையில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் ஆப்ரிக்க-அமெரிக்க பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.