மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெள்ளத்தில் சிக்கிய கென்யா..71 பேர் பலியான நிலையில் உயிர்பலி அதிகரிக்க கூடுமோ என்ற அச்சம்..!
கென்யா மற்றும் அதை சுற்றியுள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பல மாதங்களாகவே கடும் வறட்சி நிலவி வந்தது. இந்நிலையில் திடீரென கொட்டி தீர்க்கும் கனமழையால் கென்யாவில் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி தீவு போல் காட்சியளிக்கின்றன.
மேலும் கென்யாவில் உள்ள டானா ஆற்றில் அதிக மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எல் - நினோ என்று அழைக்கப்படும் பசுபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரிப்பால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு திடீர் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் கென்யாவில் மட்டும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 71 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க குடும்பம் என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.