மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
11 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி: கூரையை பிய்த்துக்கொண்டு தொழிலாளிக்கு கொட்டிய ரூ.45 கோடி.!
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜு. இவர் துபாயில் உள்ள புஜைரா பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலைபார்த்து வருகிறார்.
கடந்த 11 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வரும் ஸ்ரீஜூவுக்கு மனைவி, 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் சொந்த ஊரில் இருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீஜு இந்தியா வந்துசெல்வார்.
சமீபத்தில் அவர் வெளியே சென்றிருந்தபோது, லாட்டரி சீட்டுகளை வாங்கி இருக்கிறார். இந்நிலையில், அவர் தனது நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தபோது, லாட்டரி வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்ப அதிர்ச்சியில் திகைத்துப்போன ஸ்ரீஜு துள்ளிக்குதித்துள்ளார். அவர் இந்திய மதிப்பில் ரூ.45 கோடி அளவிலான தொகையை வெற்றிபெற்று மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பவுள்ளார்.