மழலையர் பள்ளியில் பயங்கரம்.. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கொலை.. கொடூரன் தற்கொலை.. பேரதிர்ச்சி சம்பவம்.!



kindergarden-childrens-killed-by-gun-shooting-in-russia-R9RAR8

மழலையர் பள்ளியில் நுழைந்த மர்மநபர், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 3 பேரை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள Veshkaima நகரில் சிறுவர்களுக்கான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென பள்ளியில் புகுந்த ஒருவன், துப்பாக்கியை வைத்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமாக அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி வந்துள்ளான். 

தொடர்ந்து சிறிது நேரத்தில், துப்பாக்கியை வைத்து சுட தொடங்கியுள்ளார். இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் பள்ளி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், மற்றொரு ஆசிரியர் காயமடைந்த நிலையில், அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

russia

அத்துடன் துப்பாக்கியால் 3 பேரை சுட்டுக்கொன்ற மர்மநபர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் காவல் துறையினருக்கு தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த மர்ம நபர் எதற்காக மழலையர் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை சுடவேண்டும்? மற்றும் தன்னையும் சுட்டுக் கொண்டு சாகவேண்டும்? என்று கேள்விகள் காவல்துறையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.