மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: டீசல் ஏற்றிச்சென்ற லாரி வெடித்து சிதறி விபத்து.. 7 பேர் பலி, 130 பேர் படுகாயம்.!
எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி விபத்திற்குள்ளாகி வெடித்து சிதறியதால் 7 பேர் பலியாகினர். 130 பேர் படுகாயம் அடைந்தனர்.
வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள லிபியா நாட்டின் தென்பகுதியில் உள்ளது பின்ட் பாயா. இந்நகரில் எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், லாரி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
விபத்தை கண்ட மக்கள் பெட்ரோலை சேகரிக்க சென்ற நிலையில், வெடிவிபத்து ஏற்பட்டதால் பெரும் சோகமே மிஞ்சியது. இவ்விபத்தில் 130 அப்பாவி பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.
மேலும், 7-க்கும் மேற்பட்டோர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.