மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடிவந்த பெண்ணை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த சிங்கம்! வீடியோ!
பொதுவாக நமது ஊரை பொறுத்தவரை செல்ல பிராணிகளாக அணில், நாய், புறா, கிளி போன்றவற்றைத்தான் அதிகம் வளர்ப்போம். ஆனால் வெளிநாடுகளை பொறுத்தவரை சிங்கம், புலி, கரடி போன்றவற்றை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். பொதுவாக உயிரினங்கள் அனைத்துமே அன்பு அடிமையானவை. அதில் மிருகம், மனிதன் என்று வித்தியாசம் இல்லை.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சிங்கம் ஒன்றை தான் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். முறையான அனுமதி இன்றி சிங்கத்தை வீட்டில் வளர்த்துவருவதால் விஷயம் அரித்த போலீசார் சிங்கத்தை கைப்பற்றி மிருகக்காட்சி சாலையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண் சிங்கத்தை பிரிந்து வருத்தத்தில் இருந்துள்ளார், அதே சமயம் தன்னை அன்பாக வளர்த்த அந்த பெண்ணையும் பிரிந்து அந்த சிங்கத்தால் இருக்க முடியவில்லை. இப்படியாக ஏழு வருடங்கள் கழிந்துவிட்டன. இந்நிலையில் தான் வளர்த்த சிங்கத்தை பார்பதற்காகா அந்த பெண் மிருகக்காட்சி சாலைக்கு சென்றுள்ளார். தான் வளர்த்த சிங்கம் அடைக்கப்பட்ட கூண்டை திறந்து ஹலோ என்ன கூறியுள்ளார். தன்னை வளர்த்த எஜமானியின் குரல் கேட்டு சிங்கம் அங்கும் இங்கும் குதித்துள்ளது.
மேலும் தன்னை சுற்றி இருந்த இரும்பு கம்பிகளையும் மறந்து அந்த சிங்கம் தனது கைகளை வெளியேவிட்டு தந்து எஜமானியை இறுக்கி அணைத்துள்ளது. பிறகு வெளியில் வர முடியாமல், அந்த பெண்ணிடம் முழுமையாக இருக்கவும் முடியாமல் தவிப்பில் தரையில் புரளுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.