மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உணவு கிடைக்காத கொடூரம்..! தங்கள் குட்டிகளையே அடித்து தின்னும் பனிக்கரடிகள்.! கண்கலங்க வைக்கும் வீடியோ..!
உணவு கிடைக்காத கொடுமையால் தங்களது குட்டிகளையே பனிக்கரடிகள் உணவாக உட்கொள்ளும் சம்பவம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பண்கரடிகளுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
போதிய உணவு கிடைக்காததால் பனிக்கரடிகள் தங்களது குட்டிகளையே கடித்து தின்னும் கொடூரம் நடந்து வருகிறது. நேஷனல் ஜாக்ரபிக் (National Geographic) இந்த காட்சியை படமாக எடுத்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
தாய்யுடன் விளையாடிக்கொண்டிருக்கும் குட்டியை மற்றொறு கரடி விரட்டி விரட்டி கடித்து கொள்ளும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைக்கும் விதமாக உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.