மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாயால் 50 வருட சிறை தண்டனையிலிருந்து எஸ்கேப் ஆன பாலியல் குற்றவாளி.!
அமெரிக்காவில் உள்ள ஓரிகன் பகுதியில் வசித்து வருபவர் ஜோசுவா ஹார்னர்.42 வயது நிரம்பிய அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால் ஜோசுவா தன்மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரை ஒத்துகொள்ளவில்லை. ஆனாலும் இந்த வழக்கில் அவர்தான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அனால் ஜோசுவா அதனை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
மேலும் இந்த வழக்கில் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிய வீட்டுக்குள் நுழைந்த ஜோசுவா ஹார்னர் வீட்டின் முன்பு ‘லூசி’ என்ற தனது செல்ல நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த நாய் இறக்கவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தற்போது தகவல் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர்.
மேலும் இறந்ததாக புகாரில் கூறப்பட்ட நாய் உயிருடன் இருப்பதால் அவர் மீது குற்றம் இல்லை வழக்கு விசாரணையின் போது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர் 50 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.