ஐபோன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர்.. 8 வருடம் கழித்து அவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி..



Man sold kidney to buy iPhone now he is in danger

ஐ போன் வாங்க ஆசைப்பட்டு ஒரு கிட்னியை விற்ற நபர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவில் உள்ள அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்தவர் 25 வயதாகும் இளைஞர் வாங் ஷாங்கன். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஐ போன் வாங்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரிடம் போதிய அளவு பணம் இல்லாததால் அவரால் ஐ போன் வாங்க முடியவில்லை.

இந்நிலையில் ஒருசில நண்பர்கள் மூலம் வாங் ஷாங்கன் தனது கிட்னியை விற்று ஐ போன் வாங்க முடிவு செய்த்துள்ளார். இதனை அடுத்து கள்ளச்சந்தையில் தனது கிட்னியை 3273 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார் வாங் ஷாங்கன். அவர் கிட்னியை விற்பனை செய்தபோது அவருக்கு 17 வயது மட்டுமே.

Health

கிட்னியை விற்ற காசில் ஐபாட் 2 மற்றும் ஐ போன் 4 ஆகியவற்றை வாங்கியுள்ளார் வாங் ஷாங்கன். மேலும் தான் உயிர்வாழ ஒரு கிட்னி போதும் என நினைத்த அவருக்கு தற்போது பெரும் அதிர்ச்சி காத்துள்ளது. ஒரு கிட்னியுடன் வாழ்ந்துவந்த அவருக்கு தற்போது அந்த கிட்னியில் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் தினமும் டயாலிசிஸ் செய்தால் மட்டுமே அவரால் உயிர் வாழ முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தெரிந்த வாங் ஷாங்கன் தாய் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் கள்ளச்சந்தையில் கிட்னி வாங்கி விற்பனை செய்யும் 9 பேரை கைது செய்துள்ளனர்.