திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போதைப்பொருள் கடத்தல் கும்பல் சண்டை.. அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழப்பு.!
மெக்சிகோவில் உள்ள குவாஜுவாடே மாகாணத்தில், சிலாவ் கிராமத்தில் 6 பேர் கொண்ட குடும்பத்தினர், தங்களின் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் வீட்டில் சடலமாக மீட்டனர்.
வீட்டில் இருந்த 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என அனைவரும் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த மர்ம படுகொலைகள் குறித்து உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், கடந்த நான்கு மாதத்தில் இது 5 ஆவது தாக்குதல் என்றும் தெரிவிக்கின்றனர்.
குவாஜுவாடே மெக்சிகோவின் மத்திய மாகாணங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில், கடத்தல் - போதைப்பொருள் இடையே நடக்கும் சண்டையால் அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம் வருடம் முதல் அந்நாட்டு இராணுவம் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.