மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலையுடன் திருமணம்., உதட்டில் இச்சு தந்து பதறவைத்த மேயர்.. வளம் வேண்டி செஞ்சாங்களாம்..!
மெக்சிகோ நாட்டின் தேன்மெற்கு திசையில் அமைந்துள்ள னகரம் ஹவுமேலூலா. இந்நகரின் மேயர் விக்டர் ஹ்யூகோ. இவர் தனது பொறுப்பில் இருக்கும் நகரம் இயற்கை வளத்தோடு செழிப்பாக இருக்க, பழங்கால சடங்கின்கீழ் பெண் முதலையை திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணத்தில் ஊர் மக்கள் திரளாக கலந்துகொண்டனர். பாரம்பரிய இசை முழங்க, வண்ணமயமாக திருவிழா நடக்க, கிருத்துவ முறைப்படி முதலைக்கு வெள்ளைநிற கவுன் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. பாதுகாப்பு காரணத்திற்க்காக முதலையின் வாய் மட்டும் கட்டப்பட்டு இருந்தது.
திருமணம் முடிந்ததும் முதலையை திருமணம் செய்த மேயர், முதலையின் உதட்டில் அன்பு முத்தமிட்டார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இயற்கையிடம் மழை, உணவு, மீன் வளங்கள் வேண்டி பிரார்த்தனை நடத்தப்பட்டது. இது எங்களின் நம்பிக்கை" என்று தெரிவித்தார்.