தரையில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்; 15 பேர் பலியான கோர விபத்து.!



militry airoplane - eron - kirkisdan - accident in 15 persons dead

 

ஈரானில் இருந்து கிர்கிஸ்தான் நாட்டிற்கு சென்ற ராணுவ விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 15 போ் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இருந்து கார்கோ என்ற விமானம் 16 பேருடன் உணவு பொருட்களை ஏற்றிக்கொண்டு கிர்கிஸ்தான் நாட்டிற்கு சென்று உள்ளது. அந்த விமானம் போயிங் 707 என்ற ராணுவத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 15 போ் உயிாிழந்திருப்பதாக ஈரான் ராணுவத்தினா் தொிவித்துள்ளனா்.

வானிலை மோசமடைந்து இருந்ததால் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அந்நாட்டு அதிகாாிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.