திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உலக அழகி இறுதிப் போட்டி திடீர் தள்ளி வைப்பு! இதுதான் காரணமா?? வெளிவந்த ஷாக் தகவல்.!
2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளவிருந்த 17 அழகிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் போட்டி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி இறுதிப்போட்டி போர்ட்டோரிக்கோ நாட்டில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு திடீரென போட்டி தள்ளி வைக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது உலக அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ள 17 அழகிகளுக்கு கொரனோ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களில் இந்தியா சார்பாக பங்கேற்கவிருந்த மானசா வாரணாசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதனை தொடர்ந்து இறுதிப் போட்டி அடுத்த 90 நாட்களில் போர்டோரிகோவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக அழகி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உலக அழகி போட்டியில் பங்கேற்பாளர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதிப் போட்டியை ஒத்திவைக்க போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்காக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.