மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான்காவது குழந்தை பிறந்ததும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு..! 12 பேருக்கு வாழ்வு கொடுத்து மூளைச்சாவு அடைந்த அமெரிக்கப் பெண்..!
அமெரிக்காவை சேர்ந்தவர் இளம் பெண் கேத்தலின் தோர்சன். கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேத்தலின் அழகான குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், இது கேத்லினுக்கு நான்காவது குழந்தை.
பிரசவம் முடிந்து சில நாட்களிலையே வீட்டிற்கு சென்ற கேத்தலின் ஒருநாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சோதித்தபோது, அவரது மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
பல்வேறு சிகிச்சைகள் கொடுத்தும் மருத்துவர்களால் கேத்தலினை காப்பாற்ற முடியவில்லை. அவர் மூளை சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, தனது உடல் உறுப்புக்களை தானம் வழங்க கேத்தலின் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது உடல் உறுப்புக்களை தனமாக பெற்று அதன் மூலம் 12 பேருக்கு வாழ்வளிக்கப்பட்டுள்ளது.
தான் இறந்தும் 12 பேரை கேத்தலின் வாழவைத்திருப்பதாகவும், அவரது கடைசி ஆசை நிறைவேறிவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.