முதலையின் கழுத்தில் சிக்கிய டயர்! டயரை அகற்றுபவருக்கு தக்க சன்மானம் என அறிவித்த அரசு!



Muthalai

இந்தோனேசியாவில் கழுத்தில் டயர் சிக்கியப்படி அழையும் முதலையை காப்பாற்றுபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி பகுதியில் உள்ள பாலு ஆற்றில் ஒரு முதலை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கழுத்தில் டயர் மாட்டிக்கொண்டு வாழும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

muthalai

இந்த நிலை தொடர்ந்தால் சில நாட்களில் முதலையின் கழுத்தில் இருக்கும் டயர் முதலையின் கழுத்தை இறுக்கி முதலை இறக்க நேரிடும். இதனை தடுக்க அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது வனவிலங்கு மீட்பில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அதன் பாதுகாப்பில் தீவிர அனுபவம் உள்ளவர்கள் முதலையை காப்பாற்றினால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.