#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Netflix அக்கவுண்ட்டை வள்ளல் போல தானம் செய்தவரா நீங்கள்?.. அதிரடி காண்பிக்கும் Netflix.. இது லிஸ்ட்லேயே இல்லப்பா..!
உலகளவில் மிகக்குறைந்த நேரத்தில் அதிகளவு பார்வையாளர்கள் மற்றும் பயனர்களை பெற்ற Netflix நிறுவனம் தனது சேவை கட்டணத்தை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்நிறுவனம் தனது சந்தாதாரர் அவரின் கடவுச்சொல்லை வேறொரு நபருக்கு பகிர்ந்து குறித்து சோத்தித்து, அதற்கேற்ப கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம் என்றும் தெரியவருகிறது.
Netflix செயலி மூலமாக உலகளவில் பல்வேறு திரைப்படங்கள், தொடர்கள் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு சந்தாதாரர் வருடத்திற்கு அல்லது மாதத்திற்கு என குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால், அதன் வாயிலாக தனது நண்பர்களுக்கும் தனது கடவுச்சொல்லை பகிர்ந்து அவர்களாலும் படம் பார்க்க இயலும் என்ற நிலை இருந்தது.
ஒருவரின் மின்னஞ்சல்/அலைபேசி எண் மற்றும் கடவுச்சொல் இருந்தால், அதனை வைத்து மற்றொரு நபரும் அதிகபட்சமாக 5 முதல் 6 பேர் வரை அதனை உபயோகம் செய்யலாம். அதில் நாம் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப நிபந்தனைகள் இருக்கும். இவ்வாறான செயல்களால் Netflix செயலி அதிகளவில் பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டாலும், அவர்களும் வருமானத்தில் சிக்கல் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இதனால் தங்களின் பயனர் யார்? யாருக்கு, அதாவது தனது குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து வேறு யாருக்கெல்லாம் கடவுச்சொல்லை வழங்கியுள்ளார் என்ற விபரங்கள் திரட்டப்பட்டு, இனி வரும் நாட்களில் அவ்வாறு அதிக பயனர் உபயோகம் செய்ய வேண்டும் என்றால் அதற்கேற்ப பணம் செலுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனைகள் முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள சில நகரங்களில் தொடங்கப்படவுள்ளது.
இதன் மூலமாக ஒரு பயனர் பதிவு செய்து வைத்த கணக்கை மற்றொருவர் உபயோகம் செய்யும் போது, அவரின் தனிப்பட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவருக்கென புதிய கணக்கு தொடங்க வழிவகை செய்யப்படும். இந்த விபரங்கள் உரிமையுள்ள பயனரின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் அனுமதி அளித்ததும் தான் மற்றொருவர் பயன்படுத்த முடியும் என்ற நிலைவரக்கூடும்.