மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் சரியாகிவிடும்! கொரோனோவால் பரிதவிக்கும் இத்தாலிக்கு புத்துயிர் கொடுத்த குழந்தை! வைரலாகும் புகைப்படம்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இத்தகைய கொடிய வைரஸால் உலகம் முழுவதும் 160000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் இத்தாலியில் மட்டுமே இதுவரை 630க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் இத்தாலி நாடே நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தையின் புகைப்படம் ஒன்று இத்தாலி மக்களுக்கு புத்துயிரை அளித்துள்ளது.
மிலன் நகரில் நிகுர்தா பகுதி மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன் டயப்பரின் பின்னால் எல்லாம் சரியாகி விடும் என இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு, வேறு எதையும் விட வாழ்க்கை மிக வலிமையானது. இப்போதிருக்கும் கடினமான சூழ்நிலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் வரவேற்கிறோம். வாழ்க்கை எப்போதும் ஓரிடத்திலேயே நிற்காது என்பதற்கு நீங்களே சான்று என பதிவிட்டுள்ளது. மேலும் பலரும் அந்த குழந்தைக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.