திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குளிக்கும் போது இந்த பெண்ணின் வயிறு திடீரென வெடித்து குடல் குளியலறையில் தொங்கிக் கொண்டிருந்தது..! என்ன நடந்தது.? பதறிப்போன மருத்துவர்கள்..!
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற சம்பவம் இது. குழந்தை பிறந்து சில நாட்களே ஆன இளம் தாய் ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்தபோது அவரது வயிறு வெடித்து, குடல் அவரது கையில் சரிந்தது.
ஆம், நம்ப முடியவில்லையா? ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள மாக்டஃப் என்னும் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான மெல் ப்ரெம்னர் என்ற பெண். இவர் சில வாரங்களுக்கு முன்னர் சிசேரியன் மூலம் குழந்தை பெற்று, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீதிக்ரு வந்த இவர் சில நாட்கள் கழித்து வீட்டில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது ஷாம்பு பாட்டில் கை தவறி கீழே விழுந்துள்ளது, மெல் ப்ரெம்னர் கீழே குனிந்து அந்த ஷாம்பு பாட்டிலை எடுக்க முயற்சித்தபோது அவரது வயிற்றில் போடப்பட்டிருந்த தையல் பிரிந்து அவரது குடல் அவரது கையில் சரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியைடந்த அந்த பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து வீட்டிற்குள் சென்று கட்டிலில் அமர்ந்துள்ளார்.
பின்னர் தனது கணவனை அழைத்து நிலைமையை புரியவைக்க, அவரது கணவன் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வயிற்றில் தையல் போடப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு தனது குழந்தையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சுக பிரசவம் போன்று வராது என்றும், அதில் உள்ள சிரமங்களையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் மெல் ப்ரெம்னர்.