"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
31 மணி நேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்!
நைஜீரியா பாடகி ஒருவர் நீண்ட நேரம் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பலரும் பல்வேறு சாதனைகள் படைப்பதற்காக வழக்கத்திற்கு மாறாக சில செயல்களை செய்து வருகின்றனர். அதன்படி நீளமான மற்றும் அகலமான உடல் பாகங்கள் மற்றும் சமையல், நடனம், விளையாட்டு போன்றவற்றிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் நைஜீரிய பெண் ஒருவர் தொடர்ந்து அதிக நேரம் கிறிஸ்மஸ் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதன்படி, சுமார் 31 மணி நேரம் தொடர்ச்சியாக பாடியுள்ளார்.
நைஜீரியா நாட்டை சேர்ந்த எவாலுவா ஒலாட்டுஞ்சி என்ற இளம் பெண் சுமார் 31 மணி நேரம் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இதில் உணவு உண்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் என தனியாக நேரம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனை நிகழ்வின் போது அவருக்கு தொண்டை வலி ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பாடி சாதனை படைத்துள்ளார்.