திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்... எமனாக மாறிய தொட்டில் கயிறு.... சிறுவனுக்கு நேர்ந்த அவலம்.!
இலங்கையில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிய ஒன்பது வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இலங்கையில் நாவலப்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் சிறு குழந்தைக்காக தொட்டில் கட்டப்பட்டிருக்கிறது. அந்தத் தொட்டிலில் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிலின் கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியிருக்கிறது இதனைத் தொடர்ந்து அவனை மீட்க குடும்பத்தினர் போராடி இருக்கின்றனர்.
ஆனால் தொட்டில் கயிற்றால் கழுத்து இறுகி அந்த சிறு அன்ப பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்பது வயது சிறுவன் தொட்டில் கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.