மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ பார்த்த குற்றத்திற்காக 20 வயது இளம்பெண்ணுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் - வடகொரியாவின் பகீர்..!
வடகொரியாவின் இருந்துகொண்டு தென்கொரிய உணவுகளின் விளம்பரங்கள், கலைநிகழ்ச்சிகளை பார்த்து, அதனை பகிர்ந்ததாக 20 வயது இளம்பெண்ணை வடகொரியா அரசு தூக்கிலிட்டுள்ளது. வடகொரியாவில் அரசுத்துறையில் பணியாற்றும் வரும் மகளுக்கு தான் இந்த கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வடகொரியா - தென்கொரியா பிரச்சனையில் அந்நாட்டு மக்கள் கடுமையாக துன்பப்பட்டு வருகின்றனர். வடகொரியா அணு ஆயுதங்களை தயாரித்து சோதனை செய்வதாக பொருளாதார தடை விதித்துள்ள காரணத்தாலும், அந்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதால், வடகொரியாவின் நடைபெறும் பல துயரங்கள் வெளி உலகுக்கு தெரியவில்லை.
வடகொரிய நாட்டில் உள்ள தெற்கு பியோங்கன் மாகாணத்தில், தென் பியோங்கன் மாகாணக் கிளை அரசியல் துறைத் தலைவர் பியாங்யாங் ஹான். இவருக்கு 20 வயது மகள் இருக்கிறார். ஹானின் மகளுக்கு காதலர் ஒருவர் இருக்கும் நிலையில், அவர் கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். காதல் ஜோடி இருவரும் சேர்ந்து தென்கொரிய உணவு விளம்பரங்களை பார்த்துள்ளனர். மேலும், தென்கொரிய கலைநிகழ்ச்சிகள் தொடர்பான விடீயோக்களையும் பார்த்து வந்த நிலையில், அந்த விடியோவை நகலெடுத்து பணத்திற்காக விற்பனை செய்தும் வந்துள்ளனர்.
தந்தை வடகொரியா அரசில் பணியாற்றி வருவதால், அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி அரசின் இணைய கண்காணிப்பு வலையில் சிக்காமல் மகள் மற்றும் அவரின் காதலர் செயல்பட்டு வந்த நிலையில், அதிகாரிகள் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரின் மீதான குற்றசாட்டுகள் ஒப்புக்கொண்டதால், 300 பேர் முன்னிலையில் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 20 வயது இளம்பெண்ணின் காதலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 20 வயது பெண்மணி தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்.
மகளின் சட்டவிரோத செயலால் அவர் உயிரிழந்துவிட, அவரின் குடும்பத்தினரை அந்நாட்டு அரசு சிறையில் அடைந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து தென்கொரியா விடியோவை வாங்கியதாக 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் தற்போது ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசின் சட்டத்திட்டத்தை மதிக்காமல் செயல்பட்டால் கடும் தண்டனை கொடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.