அட இப்படி கூடவா உத்தரவு போடுவார்கள்?.. வடகொரியாவில் வினோத சம்பவம்; எல்லாம் நம்ம சர்வாதிகாரிதான்..!



North Korea President Kim Jong Un

 

வடகொரியாவில் சர்வாதிகாரியாக ஆட்சியை நடத்தி வரும் அதிபர் கிம் ஜாங் உன் வினோத உத்தரவை பிறப்பித்துள்ளார். இவரது தந்தையும் முன்னாள் வடகொரிய அதிபருமான கிங்  ஜாங்க் இல் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, வடகொரியா அதிபர் சிரிப்பதற்கு, மதுபானம் அருந்துவதற்கு தடை உத்தரவு போட்டுள்ளார்.

வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் அதிபர் தடை போட்டுள்ளார். ஏனெனில், கிம் ஜாங் இல் அவர்களின் 11வது நினைவு தினம் கடந்த 17 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு 11 நாட்கள் தூக்கம் அனுசரிக்கப்படுகிறது.

North Korea

இதனால் வடகொரியாவின் இருக்கும் குடிமக்கள் யாரும் சிரிக்கவோ, மது அருந்துவோ கூடாது. கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க கூடாது. இந்த 11 நாட்களில் மக்கள் அவர்களது உறவினர்கள் யாரேனும் இறந்து விட்டால் சத்தம் போட்டு அழக்கூடாது எனவும் தடைபோட்டு உள்ளார்.

இந்த தடையை  மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை  விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த பதினோரு நாட்களில் யாருக்கேனும் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையும் தன் வாழ்நாள் முழுவதும் பிறந்தநாள் கொண்டாடக்கூடாது என்றும் அந்நாட்டு பத்திரிகை மற்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.