அதிர்ச்சி.. ஸ்க்விட் கேம் பார்த்தால் மரணம், ஆயுள் தண்டனை.. எங்கு தெரியுமா?..!!



North Korea Student Watch Squid Game Series He Punished Jail 14 Years

ஓ.டி.டி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான தென்கொரிய தொடர் ஸ்க்விட் கேம். இது உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரியாவை சார்ந்த இயக்குனர் ஹவாங் டாங் ஹியூக் எழுதி இயக்கிய தொடர், கடந்த செப். 17 ஆம் தேதி வெளியாகியது. நெட்பிளிக்ஸில் வெளியான ஸ்க்விட் கேம், உலகப்புகழ் பெற்ற 10 வெப்சீரிஸில் சில நாட்களுக்கு உள்ளாக தன்னை இணைத்துக்கொண்டது. இந்த தொடருக்கு வரவேற்பு உள்ளதை போல, சிறார்கள் மற்றும் இளகிய குணம் கொண்ட நபர்களை அதிகளவு பாதிக்கும் என மற்றொரு புறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

மருத்துவ, மனநலம் சார்ந்த வல்லுனர்களும் குழந்தைகள் ஸ்க்விட் கேம் தொடரை பார்ப்பதை தவிர்க்க வேண்டும், அதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும், இதனால் மனநல பாதிப்பு ஏற்படலாம் என்ற அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், வடகொரியாவில் ஸ்க்விட் கேமை பதிவிறக்கம் செய்து வழங்கியவருக்கு மரண தண்டனை கொடுக்கப்போவதாக தெரியவந்துள்ளது. 

world

இதுகுறித்து அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்த தகவலின்படி, சீனாவில் ஸ்க்விட் கேமின் நகலை பெற்றவர், வடகொரியாவின் அதனை விநியோகம் செய்துள்ளார். பள்ளியில் பயின்று வரும் மாணவர்களும் அதனை பார்த்துள்ளனர். இந்த விஷயம் தெரியவந்ததால், வடகொரிய படையினர் ஸ்க்விட் கேமை வாங்கி பகிர்ந்த நபருக்கு மரண தண்டனையை நிறைவேற்றவுள்ளது. பார்த்தவர்களுக்கு ஆயுள் அல்லது கடுங்காவல் தண்டனை வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த தகவலை உறுதி செய்யும் பொருட்டு, ஸ்க்விட் கேம் தொடர் காணொளி அடங்கிய டிரைவை வாங்கிய மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், ஸ்க்விட் கேம் பார்த்த 6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்காத ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சுரங்க வேலை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.