தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உலக நாடுகளே அதிர்ச்சி.. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் வடகொரியா.. பதறிப்போன ஜப்பான்.!
வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தங்களின் கடல் பரப்பில் விழுந்துள்ளது என ஜப்பான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறியும் வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் உலக நாடுகளுக்கு பெரும் சவால் மிகுந்த நாடாக எதிர்காலத்தில் வடகொரியா திகழலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
அவ்வப்போது வடகொரியா நடத்தி வரும் ஏவுகணை சோதனைகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில், இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும், ICBM எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை நடத்தியதில், அது வடகொரியாவின் இருந்து மேற்கு ஜப்பானின் கடல் பகுதி வரை சென்றுள்ளது. ஜப்பானின் நிலப்பரப்பில் இருந்து 150 கி.மீ தொலைவில் விழுந்துள்ளது. மேலும், வானில் சுமார் 6000 அடி உயரத்தில் பறந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் வருடத்திற்கு பின்னர் வடகொரியாவின் ஏவுகணை ஜப்பான் கடற்பரப்பில் விழுந்துள்ளது இதுவே முதல் முறை என்றும் தெரியவருகிறது.